சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆ.கருப்பையா (89) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

  இவர், 1962-ல் கங்கைகொண்டான் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 முதல் 1976 வரை அப்போதைய கங்கைகொண்டான் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவரது இறுதிச்சடங்கு, அனைத்தலையூர் கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இவருக்கு சீதாலட்சுமி என்ற மகளும், அழகேசன், ஆ.க.மணி, அண்ணாதுரை,  கருணாநிதி ஆகிய 4 மகன்களும் உள்ளனர். இதில், ஆ.க.மணி, மானூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவராவார். இப்போது மானூர் ஒன்றிய தி.மு.க. செயலராக உள்ளார். தொடர்புக்கு-94434 95752.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai