சுடச்சுட

  

  திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சத்திரம் புதுக்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை மேயர் விஜிலா சத்தியானந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

  மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டலத்துக்குள்பட்ட இப் பகுதியில் 8 சாலைகளை 1,200 மீட்டர் தொலைவு அமைக்க மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

  சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தச்சநல்லூர் சாலையில் சத்திரம் புதுக்குளம் பிரிவுப் பகுதியில் நடைபெற்ற பணிகளை மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கிவைத்தார். ஏற்கெனவே உள்ள சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல், கற்களை பெயர்த்து எடுத்து புதிதாக ஜல்லி கற்களை நிரப்பி இந்த தார்ச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தம் 8 சாலைகள் அமைக்கப்படுகின்றன.

  இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், துணை மேயர் பூ. ஜெகநாதன், தச்சை மண்டலத் தலைவர் மாதவராமானுஜம், உதவி ஆணையர் (பொறுப்பு) சாமுவேல் செல்வராஜ், இளநிலைப் பொறியாளர் பைசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மக்கள்பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai