சுடச்சுட

  

  கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டியில் நடைபெற உள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 3 மணி நேரம் போராடி ஒருவழியாக லாரியில் ஏற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

  இம்மாதம் 19-ம் தேதி தொடங்கி 48 நாள்களுக்கு நடைபெறும் இம்முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் இருந்து 10 யானைகள் பங்கேற்கின்றன.

  இம்முகாமில் பங்கேற்கும் நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெண் யானை காந்திமதிக்கு 40 வயது ஆகிறது. இந்த யானையுடன் பாகன்களான பாலகிருஷ்ணன், ராம்தாஸ், விஜயகுமார், கோவில் நிர்வாக அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் உடன் செல்கின்றனர். 

  லாரி பலகை உடைந்ததால் தாமதம்: புத்துணர்வு முகாமுக்கு புறப்படுவதற்காக லாரியில் ஏற்றுவதற்காக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி கலையரங்குக்கு காந்திமதி யானை அழைத்து வரப்பட்டது. அப்போது அங்கிருந்த லாரியில் காந்திமதி ஏறியது. பின்னங்கால்களை முதலில் லாரியில் வைத்து ஏறியது. அப்போது திடீரென இடது பின்னங்கால் மிதித்த இடத்தில் இருந்த பலகை உடைந்து கீழே சென்றது. இதனால் சிறிது நிலைகுலைந்த காந்திமதி, பின்னர் சுதாரித்துக் கலையரங்குக்குள் வந்துவிட்டது. பின்னர் வேறு லாரி வரவழைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின் புத்துணர்வு முகாமுக்கு யானை அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 10 மணியிலிருந்து சுமார் 3 மணிநேரம் போராடி லாரியில் காந்திமதி யானை ஏற்றப்ட்டது. அடம்பிடிக்கும் யானைகளை அழைத்துவர வேண்டாம் என முதல்வர் அறிவித்திருந்தபிறகும் இந்த யானை அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai