சுடச்சுட

    

    தென்னிந்திய திருச்சபை நற்செய்தி அருள்பணித்துறை சார்பில், பாளையங்கோட்டையில் 1,500 பேருக்கு செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு பண்டிகைக்காக 1,500 பேருக்கு புத்தாடைகள், உணவுப் பொருள்கள், பண முடிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, தலைமை வகித்து, பேராயர் ஜே.ஜே. கிறிஸ்துதாஸ், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என 1,500 பேருக்கு வேட்டி, சேலை, ரெடிமேட் ஆடைகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோர் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக பண முடிப்புகளும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், அருள்பணித்துறை இயக்குநர் பாஸ்கர் கனகராஜ்,  அருள்தந்தைகள் வேதநாயகம், சாமுவேல், டேவிட் அன்பு பிரபாகர், ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai