சுடச்சுட

  

  நெல்லை மாவட்ட திட்டப் பணிகள்: அரசுச் செயலர் ஆய்வு

  By திருநெல்வேலி,  |   Published on : 19th December 2013 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் நிலை குறித்து தமிழக அரசுச் செயலர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

  தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அரசுச் செயலர் கி. தனவேல், திருநெல்வேலி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராக உள்ளார்.

  மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தார். இதற்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கி. தனவேல் பேசியது:

  மாவட்டத்தில் கடந்தாண்டைவிட இந்தாண்டு 12.6 சதவீதம் மழை குறைவாக கிடைக்கப் பெற்றுள்ளது. இருப்பினும், வேளாண் சாகுபடி பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையில் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கர்ப்பிணிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் உரிய காலத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் இடைநிற்பதை தடுக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் என்ற நிலையை மாற்ற வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் அந்தத் துறைகளுக்கான 2013-14ஆம் ஆண்டு திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றார் அவர்.

  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமா மகேஸ்வரி, சார்-ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai