சுடச்சுட

  

  புலிகள் காப்பகம் மூடல்: வெறிச்சோடிய அருவிகள்

  By திருநெல்வேலி  |   Published on : 19th December 2013 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டிருப்பதால், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  களக்காடு, முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு செங்கல்தேரி, தலையணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு நம்பி கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள்  அனுமதிக்கப்படுகின்றனர்.

  அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

  சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் பாபநாசம்,  மணிமுத்தாறு அருவிகளில் குளித்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வார்கள். இப்போது  அருவிகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai