சுடச்சுட

  

  மணிமுத்தாறில் சிறுத்தைப்புலி கால்தடம் பதிவு

  By திருநெல்வேலி,  |   Published on : 19th December 2013 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பத்தில் 3ஆவது நாளாக புதன்கிழமை, வனப் பகுதியில் நேர்கோட்டுப் பாதையில் களப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது மணிமுத்தாறு அருகே சிறுத்தைப்புலி, மான், மிளா, கரடி ஆகியவற்றின் கால்தடங்களை அவர்கள் பதிவு செய்தனர்.

  களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள், தாவரங்கள் கணக்கெடுப்புப் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

   3ஆவது நாளாக புதன்கிழமை வனப் பகுதியில் களப் பணியாளர்கள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.  அம்பாசமுத்திரம் சரகத்தில் மணிமுத்தாறு அணை அருகே சிங்கம்பட்டி பீட் 3 என்ற இடத்தில் சிறுத்தைப்புலி, மான், மிளா, கரடி ஆகியவற்றின் கால்தடங்களை களப் பணியாளர்கள் பதிவு செய்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai