சுடச்சுட

    

    திருநெல்வேலியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் காயமடைந்தார்.

    திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் புதன்கிழமை மாலை பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் வந்தபோது, அதிலிருந்து தவறி விழுந்த 21 வயது இளைஞர் காயமடைந்தார்.  தகவலறிந்த திருநெல்வேலி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai