சுடச்சுட

  

  பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கண்காட்சியை நிர்வாக இயக்குநர் வை. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மாணவர், மாணவிகள் தங்களது பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். ஆதிமனிதனின் வாழ்க்கை வரலாறு, பண்டைய நாகரிகங்கள், கிராம மற்றும் நகர வாழ்க்கை முறை, கிராமப் பஞ்சாயத்து, இந்திய அரசியலமைப்பு மற்றும் கலாசாரம் ஆகியன பல்வேறு வண்ணங்களில் தத்தரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இவைத் தவிர, இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் முக்கிய நினைவுச் சின்னங்கள், வன விலங்குகள், வீட்டு விலங்குகள், நிலம், நீர், வான் மற்றும் விண்வெளி போக்குவரத்து, கண்டங்களின் உருவாக்கம், நிலத்தோற்றம், சூரியக் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு மாதிரிகளுக்கும் கீழே அதன் விளக்கங்களும் இடம் பெற்றிருந்தது பார்வையாளர்களுக்கு பெரிதும் உபயோகமாக இருந்தது. சமூகவியல் நிகழ்வுகளுக்கு நிகழ்கால தலைமுறைக்கு தத்ரூபமாக எடுத்துக் காட்டும் வகையில் இக்கண்காட்சி அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கான மாணவர், மாணவிகள், பெற்றோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai