சுடச்சுட

  

  ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

  மாவட்டத் தலைவர்கள் மு. விநாயகசுப்பிரமணியன் (திருநெல்வேலி), பெ. ராகவன் (தூத்துக்குடி), யோ. வர்கீஸ் (கன்னியாகுமரி) ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். ஊராட்சிச் செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு இடைக்காலமாக மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். சுகாதாரத் திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும்.

  ஊராட்சிச் செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் கூடாது. ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்பநல நிதி, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

  உண்ணாவிரதத்தை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெ. கிருஷ்ணசாமி தொடக்கிவைத்தார்.

  அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் குமாரவேல்,  மாநிலச் செயலர் சுமதி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் வீரபாகு உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai