சுடச்சுட

  

  பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க மறுத்ததாகக் கூறி பேராசிரியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பணியாற்றி வந்த ஜெசுதாஸ்,  பீட்டர் பேரின்பராஜ் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்தினால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

  இந்நிலையில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும், ஒரு பேராசிரியரின் இடைநீக்கக் காலத்தை 2 மாதங்களுக்கு மேல் காலநீட்டிப்பு செய்ய, அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநகரத்தின் அனுமதி பெற வேண்டுமென ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி நீட்டிப்புச் செய்யப்படாததால், இடைநீக்கம் செய்யப்பட்ட இரு பேராசிரியர்களும் வியாழக்கிழமை காலையில் கல்லூரிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு வகுப்புக்குச் சென்றனராம்.

  இதற்கு கல்லூரி முதல்வர் ஆட்சேபம் தெரிவித்ததோடு, பேராசிரியர்களைப் பாடம் நடத்த அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து மூட்டா நிர்வாகிகள் கூறுகையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டியும் தூய யோவான் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது. பேராசிரியர்களைப் பணியாற்ற விடாமல் தடுத்தது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கல்லூரிக் கல்வி இயக்குநகரத்தில் சென்று முறையிடவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai