சுடச்சுட

    

    சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உதவி

    By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு, தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித் தொகைகளை திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    திருநெல்வேலி வட்டம், கங்கை கொண்டான் அருகே கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த வடகரை வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன், சங்கர், மாரிமுத்து ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சாலை விபத்து நிவாரணத் தொகையாக தலா 1 லட்சத்து 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.

     இதற்கான காசோலைகளை உயிரிழந்தவர்களது குடும்பத்தினரிடம் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புதன்கிழமை வழங்கினார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜாகீர் உசேன் உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai