சுடச்சுட

  

  தொல்காப்பிய எழுத்து சொல் இலக்கணக் கோட்பாடு வளர்ச்சிப் பயிலரங்கம் நிறைவு

  By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் தொல்காப்பிய எழுத்து சொல் இலக்கணக் கோட்பாடு வளர்ச்சிப் பயிலரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி உதவியுடன் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில், இப்பயிலரங்கம் டிச. 10 ம் தேதி தொடங்கி, 10 தினங்கள் நடைபெற்றது.

  இப்பயிலரங்கில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள், பொருள் மாற்றம், எழுத்துக்களின் பிறப்பு, சொல் வகைகள், எழுத்துக்களின் வரி வடிவம், உரிச்சொல் வகைகள், வேற்றுமைப் புணர்ச்சி, ஒப்பிலக்கண ஆய்வு, இடைச்சொல், திணைப்பால் பாகுபாடு, ஆகுபெயர், குறிப்பு வினை உள்ளிட்ட தலைப்புகளில் தமிழறிஞர்கள் பேசினர்.

   நிறைவு விழாவுக்கு, கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் செண்பகத்தாய் தலைமை வகித்தார். தமிழ்த் துறை பேராசிரியை இரா. சின்னத்தாய் முன்னிலை வகித்தார். பயிலரங்க அறிக்கையினை முனைவர் என். வேலம்மாள் வாசித்தார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறை இணைப் பேராசிரியர் ஞா. ஸ்டீபன் சிறப்புரையாற்றினார்.

  பயிலரங்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து பி.எச்டி., எம்.பில்., ஆய்வு மாணவியர் 40 பேர் கலந்து கொண்டனர். பயிலரங்கில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்று வழங்கப்பட்டது.

  பேராசிரியை உமாதேவி வரவேற்றார். பயிலரங்க நெறியாளர் இரா.ச. சுகிர்தாபஸ்மத் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai