சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் டிச. 21-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: களக்காடு பேரூராட்சியில் ஒருங்கிணைந்த வாகனக் காப்பகம் கட்டுவதற்காக கனிமொழி எம்.பி. ரூ. 25 லட்சம் மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கியுள்ளார். அந்த வாகனக் காப்பகத் திறப்பு விழா, சனிக்கிழமை (டிச. 21-ஆம் தேதி) நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு காப்பகத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 

  மேலும் கட்சியின் 14-ஆவது உள்கட்சித் தேர்தலில் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிக் கிளைகள், பேரூராட்சி வார்டுகள், நகர்மன்ற வார்டுகளில் போதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல் இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.   ஆகவே கட்சி விதிப்படி உறுப்பினர்கள் சேர்க்கப்படாத ஊராட்சி, பேரூராட்சி, நகர்மன்றக் கிளைகளில் போதுமான உறுப்பினர்களை சேர்ப்பதற்கு டிச. 23-ஆம் தேதி முதல் வரும் 2014 ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai