சுடச்சுட

  

  "நெல்லையில் நிகழாண்டு 68 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு'

  By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டு 68 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

  தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், தொழிற்சாலைகள் துறை, தொழிலாளர் துறை, ஸ்காட் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து குழந்தைகள் தின விழாவை வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடத்தின. இதையொட்டி குழந்தைகளுக்கான உற்சாக மேளா நடைபெற்றது. இதில், குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் 400 குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களின் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடக்கிவைத்து ஆட்சியர் பேசியதாவது:

  தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் மீட்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி மையத்தில் தாற்காலிகமாக கல்வி அளித்து பின்னர், அரசுப் பள்ளிகளில் அவரவர் வயதுக்கு தகுந்தபடி வகுப்புகளில் சேர்க்கப்படுவர். மேலும், கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 150 வழங்கப்படுகிறது. இவை தவிர அவர்களது பெற்றோருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. இம் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் 100 குழந்தைத் தொழிலாளர்கள் நிரந்தரமாக கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  நிகழாண்டு இதுவரை 68 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, இணைப்புக் கல்வி மையங்களில் கல்வி பயின்று வருகின்றனர் என்றார்.

  பிற்பகலில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. விஜயகுமார் பேசினார்.  ஸ்காட் குழுமங்களின் தலைவர் எஸ். கிளீட்டஸ் பாபு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் ஜே.இ. சந்திரகுமார், தொழிற்சாலைகள் ஆய்வாளர் ஏ. வேல்முருகன், கள அலுவலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர். சிறப்பு பயிற்சி மையக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai