சுடச்சுட

  

  திருநெல்வேலி அருகே மணல் கடத்தியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

  முன்னீர்பள்ளம் அருகே தாமிரவருணி ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்ததபோது, மினி லாரியில் 7 பேர் மணல் அள்ளியது தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலச்செவல் ஜோதிபுரத்தைச் சேர்ந்த கோயில்பிச்சை மகன் ஜான்சன் (21), மேலத்திடியூரைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்து என்ற சுடலைமுத்து (19) ஆகியோரை போலீஸார் பிடித்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

  இதேபோல் திடியூர், பச்சையாற்று பாலம் அருகில் மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக, நடுத்திடியூரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் துரைசாமி என்ற ரவியை  போலீஸார் கைது செய்தனர். ரவியுடன் சேர்ந்து மணல் அள்ளிய அப்பகுதியைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: கோபாலசமுத்திரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் தளவாய் (31). கோபாலசமுத்திரம் முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நயினார் மகன் பசுங்கிளி (23). இருவரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த நவ. 1-ஆம் தேதி கோபாலசமுத்திரத்தில் தொழிலாளி தர்மராஜை கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai