சுடச்சுட

  

  மாணவி பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு: பாதிரியார், பெண் டாக்டர் மீது வழக்கு

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில், மாணவியை பாலியல் வன்முறை செய்து கருக்கலைப்புக்கு உள்ளாக்கியதாக பாதிரியார் மீதும், கருக்கலைப்பு செய்ததாக பெண் மருத்துவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவர் பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

  தேவாலயத்துக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவியை, செல்வம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினாராம். இதில் மாணவி கருவுற்றார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், செல்வத்திடம் முறையிட்டனர்.  அப்போது அவர்களை சமாதானப்படுத்திய செல்வம், திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த டாக்டர் மீனாட்சி மூலம் கருக்கலைப்பு செய்ய முயன்றாராம். இறந்த சிசு பேட்டை பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப் பகுதி மக்கள் தேவாலயம் அருகேயுள்ள செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டதால், அவர் தப்பியோடிவிட்டார்.

  புகாரின்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் து.பெ. சுரேஷ்குமார்

  (சட்டம்-ஒழுங்கு) உத்தரவின்பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து செல்வம், டாக்டர் மீனாட்சி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

  இதனிடையே, சிசு சடலத்தை தோண்டி எடுத்து, சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai