சுடச்சுட

    

    திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாட்டத்தில், வீடுதோறும் மோடி-உள்ளம்தோறும் தாமரை என்ற பிரசாரத்தை பா.ஜ.க.வினர் மேற்கொண்டனர்.

    இந்தப் பிரசாரத்துக்கு பா.ஜ.க.வின் கே.டி.சி. நகர் துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். 13-வது வார்டு தலைவர் ஏ.ஆறுமுகசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலப்பாட்டம் நிர்வாகிகள் சுடர்மணி, பிச்சுராஜன், சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் சாதனைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாக விநியோகித்தனர். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ய உதவுமாறு பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai