சுடச்சுட

  

  மேலப்பாளையத்தைச் சேர்ந்த 2 பேருக்கு சிறந்த ரத்தக் கொடையாளர் விருது

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேலப்பாளையத்தைச் சேர்ந்த 2 பேருக்கு சிறந்த ரத்தக் கொடையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

  மேலப்பாளையம் ஸ்பீடு ரத்த தான சேவைக் கழகம் சார்பில், கடந்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 715 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் டீம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற விழாவில் 15 முறை ரத்த தானம் செய்துள்ள ஸ்பீடு ரத்த தான சேவைக் கழகத்தைச் சேர்ந்த பி.ஷாம்சகாபுதீன், பி.எஸ்.அஸ்கருதீன் ஆகியோருக்கு சிறந்த ரத்தக் கொடையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

  இவ் விழாவில் முன்னாள் முதன்மை மாவட்ட நீதிபதி என். ரத்தினராஜ், மனித உரிமைகள் கழகத்தின் மாவட்டத் தலைவர் திருமலைமுருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி. பிரபாகர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆர். கனகராஜ், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி. தமிழ்ச்செல்வன், ஸ்பீடு ரத்த தான சேவைக் கழகத்தின் தலைவர் நிஸார் அகமது, செயலர் சாகுல் ஹமீது பாதுஷா, துணைத் தலைவர் அசாருதீன், பொருளாளர் நவாஸ், சிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai