சுடச்சுட

    

    திருநெல்வேலியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     திருச்செந்தூர்-திருநெல்வேலி பயணிகள் ரயில் புதன்கிழமை மாலை, பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் வந்தபோது, அதில் இருந்து விழுந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் காயமடைந்தார்.

     இது குறித்து தகவலறிந்ததும், திருநெல்வேலி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

    இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai