சுடச்சுட

  

  ராணி அண்ணா கல்லூரியில் வளாக நேர்காணல்: 60 பேருக்கு வேலை

  By திருநெல்வேலி  |   Published on : 20th December 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில்  நடைபெற்ற வளாக நேர்காணலில் 60 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.

  ஐஎஸ்எஸ்எம்பி (இந்தியன் ஸ்கூல் ஆப் சயின்ஸ் அன்ட் மேனேஜ்மென்ட்) நிறுவனத்தின் சார்பில் இக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வளாக நேர்காணல் நடைபெற்றது. குழுத் தலைவர் மற்றும் களப்பிரதிநிதி பணியிடங்களுக்காக நடந்த இந்த வளாக நேர்காணலில் 300 மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இந்த வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் சி. விஜயாம்பிகா தொடக்கி வைத்தார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சுவர்ணலதா ஜோசப், பேராசிரியர் விக்னேஷ் பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து வளாக நேர்காணலை நடத்தினர். இதில், 60 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

  முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியை மங்கையர்க்கரசி, விலங்கியல்துறை உதவிப் பேராசிரியர் பி. வனிதா பாப்பா ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai