சுடச்சுட

  

  109 பள்ளிகளில் ரூ. 1.04 கோடியில் குடிநீர், கழிப்பறை வசதி

  By திருநெல்வேலி,  |   Published on : 20th December 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 109 பள்ளிகளில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் புதிதாக கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்படவுள்ளன.

   அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் புதிய வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைச் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.   இதேபோல, 2013-14ஆம் நிதியாண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் 109 பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்துதரப்படவுள்ளது.

  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படியும், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் முன்னுரிமை அளித்து 109 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  இதில், 42 பள்ளிகளில் 50 பொதுக் கழிப்பறைகளும், 35 பள்ளிகளில் மாணவியருக்கான 41 கழிப்பறைகளும், 46 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும் செய்துதரப்படவுள்ளன. பொதுக் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 50 லட்சமும், மாணவியர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ. 41 லட்சமும், குடிநீர் வசதி செய்துதர ரூ. 12.88 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

  இதற்கான காசோலைகள் அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai