சுடச்சுட

  

  ஆலங்குளத்தில் விஷவாயு தாக்கி இருவர் மயக்கம்

  By ஆலங்குளம்,  |   Published on : 21st December 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆலங்குளத்தில் விஷவாயு தாக்கியதில் இருவர் மயக்கமடைந்தனர்.

  ஆலங்குளம்-தென்காசி சாலையில் வசிப்பவர் செல்வன். இவர் தனது வீட்டில் குடிநீர்த் தொட்டி கட்டியுள்ளாராம். இதில் பாசி பிடிக்காமல் இருக்க வண்ணம் தீட்டுவதற்காக நல்லூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் ராஜ் (53), சுப்பிரமணியன் மகன் பிச்சையா (42) ஆகியோரை வெள்ளிக்கிழமை அழைத்து வந்தாராம்.

  வண்ணம் தீட்டுவதற்காக தொட்டிக்குள் இறங்கிய இருவரும் சிறிது நேரத்தில் பெயிண்ட் வாசனை தாங்க முடியாமல் வாயு தாக்கி மயக்கமடைந்தனராம். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜாமணி தலைமையில் வீரர்கள் வெள்ளைத்துரை, மைக்கேல் சார்லஸ், சண்முகராஜ் ஆகியோர் விரைந்து சென்று, தொட்டிக்குள் இறங்கி மயக்கமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai