சுடச்சுட

  

  எச்ஐவி இறப்பு இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ஆட்சியர்

  By திருநெல்வேலி  |   Published on : 21st December 2013 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எச்ஐவி தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை வெள்ளிக்கிழமை அனுசரித்தன. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவர், மாணவிகள், அரசு அலுவலர்கள் எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.

  தொடர்ந்து மாணவர், மாணவிகளின் மனிதச் சங்கிலியும் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலவகத்தில் இருந்து தொடங்கிய இந்த மனிதச் சங்கிலி இயக்கத்தை தொடங்கிவைத்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:

  2017ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியத்தை நோக்கி எய்ட்ஸ் என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு இதற்காக பல்வேறு வகைகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு சாராத துறைகள் இணைந்து எய்ட்ஸ் ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

  எச்ஐவி பாதித்த நபர்கள் தங்களது வாழ்நாளை நீடிக்கும் வகையில் மருந்துகள் அரசால் அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகின்றன. 18 முதல் 49 வயதுடையவர்களிடம் அதிகம் பாதிப்பு உள்ளது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்து அனைவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும்.

  புதிய எச்ஐவி தொற்றுகள் இல்லை என்ற நிலை உருவாக்க முடியும். மேலும், எச்ஐவி இறப்பு இல்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். நோய் பாதித்தவர்களை புறக்கணிக்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai