சுடச்சுட

  

  சமூக நிகழ்வுகளுடன் கிறிஸ்துமஸ் குடில்கள்

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில், இன்றைய சமூக நிகழ்வுகளையொட்டி மாணவர்கள் அமைத்திருந்த கிறிஸ்துமஸ் குடில்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றன.

  இக்கல்லூரியில் கிறிஸ்துமஸ் குடில் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி தமிழ்த் துறை, ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல், நாட்டார் வழக்காற்றியல், வணிகவியல் மற்றும் கார்ப்பரேட், எம்பிஏ உள்ளிட்ட 22 துறைகளின் சார்பில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

  இக்குடில்கள் அனைத்தும் இன்றைய சூழலில் கிறிஸ்து பிறந்தால் எப்படி இருக்கும் என்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தன. தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், இலங்கையில் இனப் படுகொலை, செவ்வாய்க் கிரகத்தை ஆக்கிரமிக்கும் நிகழ்வுகள், பணவீக்கம், காஷ்மீர் பிரச்னை, பயங்கரவாதம், சாதிய மோதல், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குடில்களில் இடம்பெற்றிருந்தன.

  இந்தக் குடில்களை ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். இப் போட்டியை சவேரியார் கலைமனைகளின் அதிபர் டேனிஸ் பொன்னையா தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் கில்பர்ட் கமிலஸ், துணை முதல்வர் அருளானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவர், மாணவிகள் பேரவைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai