சுடச்சுட

  

  சுந்தரனார் பல்கலை.யில் இலவச பயிற்சி வகுப்பு:நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்,மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்,மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வங்கி, டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்பு மனோன்மணீயம சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவின் 11-ம் திட்டத்தின் கீழ் 984 பேரும், 12-ம் திட்டத்தின் கீழ் 731 மாணவர்,மாணவிகளும் பயன்பெற்றுள்ளனர்.

  நிகழாண்டிற்கான பயிற்சி வகுப்பு 2014 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. துறைசார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்களைக் கொண்டு இந்த வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இலவச பயிற்சிக்கு மாணவர்,மாணவிகள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

  பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் (அய்ய்ர்ன்ய்ஸ்ரீங்ம்ங்ய்ற்ள்)என்ற வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை ஜி.பாலசுப்பிரமணிய ராஜா, ஒருங்கிணைப்பாளர், உய்ற்ழ்ஹ் ஐய்ற்ர் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள், நஸ்ரீ-நற்-ர்க்ஷஸ்ரீ-ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள் பயிற்சித் திட்டம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 627 012. என்ற முகவரிக்கு 3-1-2014 மாலை 5 மணிக்கு முன்பு கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிய 94879 99726 என்ற செல்போன் எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai