சுடச்சுட

  

  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆலோசனை

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு, பசுபதிபாண்டியன் சகோதரி பார்வதி சண்முகச்சாமி தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் பொன். ராஜேந்திரன், மாநில சட்ட ஆலோசகர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் சாமி, மாவட்டச் செயலர் யாகோபு, மாநகர் மாவட்டச் செயலர் முருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர், பார்வதி சண்முகச்சாமி கூறியது:

  கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திருநெல்வேலியில் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. கூட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு விரோதமாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் செயல்தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகிகள் கோரினர். அவரது நடவடிக்கைகள் கூட்டமைப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆத்தூர் ராஜேந்திரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை (டிச.22) குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் திட்டமிட்டபடி மாநிலப் பொதுக் குழு கூட்டம் நடைபெறும். இதில், மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வர். நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai