சுடச்சுட

    

    நாம் தமிழர் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேமநல ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 240 நாள்கள் பணி அமர்வு ஆணை வழங்க வேண்டும். 10 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும். சம்பள பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, தென்மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ச.சிவகுமார் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர்வாகிகள் ரா.மைக்கேல்ராஜ், செயலர் ஆ.கிருட்டிணன், பொருளாளர் டி.கே.ரமேஷ்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் செல்வராஜ், செல்லப்பாண்டியன், முத்துக்கிருஷ்ணன், மோகன்தாஸ், மாவட்ட அமைப்பாளர் சக்திபிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai