சுடச்சுட

  

  நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் நகை, பணத்துடன் தவறவிட்ட சூட்கேஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்டுச் சென்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை, பணம் இருந்த சூட்கேûஸ இருப்புப் பாதை  காவல்நிலைய பெண் உதவி-ஆய்வாளர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.

  திருநெல்வேலி மாவட்டம், மானூரை அடுத்த அழகியபாண்டிபுரத்தைச் சேர்ந்தவர்  எஸ்.பி. கண்ணன் (38). விவசாயியான இவர், மருத்துவ சிகிச்சைக்காக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வியாழக்கிழமை இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்றார். அப்போது, நகைகள், பணம் இருந்த சூட்கேûஸ திருநெல்வேலி ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

  வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி இருப்புப் பாதை காவல்நிலைய உதவி-ஆய்வாளர் ராஜகுமாரி, முதல் நடைபாதையில்  கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேûஸ மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தார்.

  பயணிகள் யாராவது தவறவிட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் அந்த சூட்கேûஸ பாதுகாப்பாக வைத்திருந்தார்.

  வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை சென்ற கண்ணன், தனது சூட்கேஸ் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  உடனடியாக தனது சகோதரர்  சண்முகவேலுவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு திருநெல்வேலி ரயில்நிலையத்தில் தவறவிட்டதை நினைவுபடுத்தி போலீஸில் புகார் அளிக்கச் செய்தார்.

  இதன்படி, இருப்புப் பாதை காவல்நிலையத்துக்கு வந்த சண்முகவேல், தனது  சகோதரரின் சூட்கேஸ் குறித்த விவரத்தைக் கூறினார். போலீஸார் அந்த சூட்கேûஸ திறந்து சோதனையிட்டதில் அவர்கள் கூறியதைப் போன்று ரூ.3 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவரிடம் சூட்கேûஸ ஒப்படைத்த போலீஸார் அறிவுரை கூறி அனுப்பினர்.

  சூட்கேûஸ பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உதவிய பெண் எஸ்.ஐ. ராஜகுமாரிக்கு, ஆய்வாளர் அருள் பிரகாஷ் மற்றும் போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai