Enable Javscript for better performance
பாலியல், கருக்கலைப்பு புகார் நெல்லை பாதிரியார் சரண்: மதுரை சிறையில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாலியல், கருக்கலைப்பு புகார் நெல்லை பாதிரியார் சரண்: மதுரை சிறையில் அடைப்பு

    By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:56 AM  |   அ+அ அ-   |    |  

    பாலியல் மற்றும் கருக்கலைப்பு புகார் தொடர்பாக திருநெல்வேலி போலீஸாரால் தேடப்பட்டு வந்த பாதிரியார் செல்வன் (35) உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வன், திருநெல்வேலி பேட்டையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்துக்கு வந்த 10-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்ததில் அந்த மாணவி கர்ப்பமானார்.

    இதைடுத்து, 5 மாதமான சிசுவை திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் உதவியுடன் கலைத்துவிட்டனராம். சிசுவின் சடலத்தை பேட்டை மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சிசுவின் சடலம் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் சடலத்திலிருந்து மருத்துவக் குழுவினர் மாதிரிகளை எடுத்த பின்னர், மீண்டும் அதே இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது.

    உத்தமபாளையத்தில் சரண்: இது தொடர்பாக திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் செல்வின், மருத்துவர் மீனாட்சி ஆகியோரைத் தேடி வந்தனர். இந்தநிலையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடுவர் கீதா முன்னிலையில் பாதிரியார் செல்வன் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை வியாழக்கிழமை வரை சிறைக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி கீதா, வரும் 26-ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள தொடர்புடைய நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    kattana sevai