சுடச்சுட

  

  பாளை.யில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி  |   Published on : 21st December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இன்சூரன்ஸ் பிரிமீயம் செலுத்தும்போது சேவை வரி வசூலிக்கும் மத்திய அரசின் புதிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாளையங்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மத்திய அரசும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து 2014 ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பிரிமீயம் செலுத்தினால் சேவை வரி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

  இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (எல்ஐஏஎப்) சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் சக்கரவர்த்தி ராஜு சிறப்புரையாற்றினார். செயலர் குமார், பொருளார் சுபாஷ் ஆகியோர் பேசினர். பாலிசிதாரர்கள் பெறும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். இறப்பு உரிமங்கள் மீது அன்றைய தினமே இழப்பீடு வழங்க வேண்டும். முகவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எல்ஐசி முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai