சுடச்சுட

    

    பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட பயனாளிகளின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    தொடர்ந்து இம் மாதம் 24-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட பயனாளிகளின் பொருள்களை சந்தைப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் கதர்கிராமத் தொழில்கள் ஆணையம், நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்துகிறது. இந்த ஆண்டு மதுரை கோட்டத்துக்கு 5 கண்காட்சிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 3-வது கண்காட்சியாக அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம் மூலம் பாளையங்கோட்டையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் தொடங்கி வைத்தார். கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இயக்குநர் க.மோகன்ராஜு முன்னிலை வகித்தார். உதவி வளர்ச்சி அலுவலர் பி.எஸ்.கணேசன் வரவேற்றார். மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் எஸ்.அழகர்சாமி, திட்ட மேலாளர் ஓ.முருகேசன், கதர்வாரிய உதவி இயக்குநர் ஜி.ராமசுப்பிரமணியன், எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் எல்.குட்டிராஜா, சர்வோதய சங்கச் செயலர் கே.எஸ்.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கதர் ரகங்கள், மெத்தை, தலையணை, பர்னிச்சர் வகைகள், தேன், பத்தி, செருப்பு, மண்பாண்டங்கள், மூங்கில் வகைகள், கைப்பைகள், மூலிகைப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் இடம்பெற்றுள்ளன.  தொடர்ந்து இம்மாதம் 24-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai