சுடச்சுட

  

  : புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக வனத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

  இதற்கிடையே, சில தினங்களாக களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகங்களில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் க. சேகர் திடீரென நாமக்கல் மாவட்ட வன அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  இதையடுத்து, அவர் முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் காஞ்சனாவிடம் வெள்ளிக்கிழமை பொறுப்புகளை ஒப்படைத்தார்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழல் மேம்பாட்டு அலுவலராகப் பணியாற்றிய பிள்ளை விநாயகம், களக்காடு புலிகள் காப்பக புதிய துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முண்டன்துறை வனச்சரகராகப் பணி யாற்றியவர்.

  அதிரடி மாற்றங்கள்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் சுப்ரதோ மஹா பத்ரே, திருச்சி வனச்செயல் கோட்ட தலைமை வனப் பாதுகாவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கள இயக்குநராக மித்தா பானர்ஜி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் குருசாமி, சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, அந்த பொறுப்பில் உதவி வனப் பாதுகாவலராக இருந்த காஞ்சனா நியமிக்கப்பட்டார்.

  இதன் தொடர்ச்சியாக களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர், வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  அடுத்தடுத்து சில மாதங்களிலேயே கள இயக்குநர், 2 துணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புலிகள் காப்பக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai