சுடச்சுட

    

    பெருமாள்புரத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூட்டா சார்பில் பெருமாள்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூய யோவான் கல்லூரியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேராசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    மூட்டாவின் மூன்றாம் மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன், டான்சாக் மண்டலத் தலைவர் க.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா துணைத் தலைவர் எம்.நாகராஜன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார். டான்சாக் மாநிலத் தலைவர் ம.சுப்பிரமணியன், மூட்டா மூன்றாம் மண்டலத் தலைவர் ஆர்.முருகேசன், டான்சாக் மண்டலச் செயலர் எம்.மகாராஜன், மூட்டா பொதுச்செயலர் எஸ்.சுப்பாராஜ் ஆகியோர் பேசினர். மூட்டா மண்டலப் பொருளாளர் நசீர்அகமது நன்றி கூறினார்.

    பேராசிரியர் கைது: முன்னதாக கல்லூரிக்குள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர்கள் ஆன்ட்ரூஸ், பீட்டர் பேரின்பராஜ், ஜேசுதாஸ் உள்பட 5 பேர் மீது தூய யோவான் கல்லூரி முதல்வர் மறைகுமார், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பேராசிரியர் ஆன்ட்ரூûஸ வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai