சுடச்சுட

  

  வண்ணார்பேட்டையில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

  By திருநெல்வேலி  |   Published on : 21st December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வண்ணார்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வெள்ளிக்கிழமை இரவு பூக்குழி இறங்கி வழிபட்டனர்.

  வண்ணார்பேட்டை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பேராச்சியம்மன், முருகன், ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. லட்சார்ச்சனை, ஐயப்ப பஜனை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியனவ நடைபெற்றன. மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் பேராச்சியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் பூக்குழி இறங்கி வழிபட்டனர். சிலர் கைகளில் தீச்சட்டி ஏந்தியபடி பூக்குழி இறங்கினர். இந்த விழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai