சுடச்சுட

  

  வேலைநிறுத்த ஆதரவு கோரி ரயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 21st December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில்வே ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

  இதன்படி ரயில்வேயில் பணிபுரியும் அனைத்துநிலை ஊழியர்களிடமும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரி ரகசிய வாக்கெடுப்பு டிச.20, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்காக 4 வாக்குப் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இந்த ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும் ரயில்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உதவிக் கோட்டத் தலைவர் சுப்பையா தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மண்டலத்தில் உள்ள ஆயிரம் ஊழியர்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் வாக்களிக்கவுள்ளனர். பின்னர், இந்த வாக்குப்பெட்டிகள் மதுரைக்கு அனுப்பப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

  வாக்குப்பதிவு விவரங்கள் மற்றும் இதர முடிவுகள் தில்லியிருந்து அறிவிக்கப்படும் என்றனர் ரயில்வே ஊழியர்கள் அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு (ஏஆர்எப்), தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் (எஸ்ஆர்எம்யூ) ஆகியவை சார்பில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai