சுடச்சுட

  

  இன்னாசியர் கல்வியியல்கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

  By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை இன்னாசியர் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

  பங்குத்தந்தை ஜோமிக்ஸ் அடிகள், கிறிஸ்துமஸ் தின நற்செய்தி அளித்தார். விழாவில், கிறிஸ்து பிறப்பு குறித்து விளக்கிடும் வகையில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கல்லூரி மாணவிகள் தேவதைகள், இயேசு கிறிஸ்துவின் பெற்றோர் போல வேடமணிந்து நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினர்.

  இதன் தொடர்ச்சியாக மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரிச் செயலர் லில்லி புஷ்பம், முதல்வர் (பொறுப்பு) புனிதா, ஒருங்கிணைப்பாளர் கிளாடிஸ் ஸ்டெல்லா பாய் ஆகியோர் பேசினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவிகள் பரிசு பொருள்களையும், இனிப்புகளையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai