சுடச்சுட

  

  டிச.21 அணு தீமையற்ற தமிழக நாளாக அனுசரிப்பு அணு உலைக்கு எதிராக நெல்லையில் பிரசாரம்

  By திருநெல்வேலி  |   Published on : 22nd December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் டிச.21-ஆம் தேதியை அணு தீமையற்ற தமிழக நாளாக  அனுசரித்து பல்வேறு இயக்கங்கள் அணு தீமைகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

  திருநெல்வேலியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், திருநெல்வேலி சந்திப்புப் பேருந்துநிலையத்தில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான் தலைமையில், மாவட்ட பொதுச்செயலர் ஜாஹீர்உசேன், துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பலர் பேருந்து பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி அணு எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

  பேருந்துகளிலும், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், கடைகள், ஆட்டோக்கள், சாலையில் வரும் வாகனங்கள் என அனைத்து மட்டத்திலும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர். இது தொடர்பாக, உஸ்மான் கான் கூறியது:

  தமிழகத்தில் டிச.21 அணு தீமையற்ற நாளாக அனுசரிக்கப்படுகிறது. மின்சாரம்  தயாரிக்க எளிமையான மாற்று எரிசக்தி திட்டங்களை பின்பற்றாமல் அணு மின் திட்டங்களை தமிழகத்தில் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம்  ஆபத்து மிக்கதுதான் என்பதாலேயே அந்த உலைகள் குறித்த தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கைகளை மத்திய தகவல் ஆணையம் தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

  மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்: இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கத்தின் சார்பிலும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ரமேஷ் தலைமையில், மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் கணேசன், கருப்பசாமி, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் ரயில்பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அணு உலைக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai