சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க திமுக மாணவரணி வலியுறுத்தல்

    By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை வண்ணார்பேட்டையில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பா. அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில மாணவரணி துணைச் செயலர் குத்தாலம் க. அன்பழகன் பேசினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், ஆறுமுகச்சாமி, முண்டசாமி, சுப்பிரமணியன், ஆனந்த், மாநகர மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப், மாநகர் மாவட்ட மாணவரணி துணைச் செயலர் வி.எம். சிவா, வழக்குரைஞர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    தீர்மானங்கள்: டிச. 28-ம் தேதி கடையநல்லூரில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்தில் மாணவரணி சார்பில் 50 வாகனங்களில் பங்கேற்பது. இம் மாவட்டத்தில் ஒன்றிய, நகர, மாநகர பகுதியில் மாணவரணிக்கு அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது. வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுகூட்டத்தை மாணவரணி சார்பில் நடத்துவது என்றும், இம்மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துள்ளது. ஆகவே குற்றங்களை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுóக்கவேண்டும். மாநகர் பகுதியில் 20 இடங்களில் வாகனச் சோதனை என்ற பெயரில் அலுவலகம், மருத்துவமனை, பஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு அவசரமாக செல்வோரை துன்புறுத்துவதை கைவிட வேண்டும்.

    இம்மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற செல்லும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே மக்கள் நலன் கருதி மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர மாணவரணி துணை அணைப்பாளர் முகம்மதுமீரான் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai