சுடச்சுட

    

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச் சங்கத்தின், நெல்லை மாவட்டக் கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈ.கனகராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் எஸ்.சம்மனசு முன்னிலை வகித்தார். பொதுச்செயலர் ஜி.நடராஜன், மாவட்டச் செயலர் எஸ்.அருணாசலம், பி.முருகானந்தம், மாநில உதவித் தலைவர் எஸ்.சம்பத்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

    7-வது ஊதியக்குழு, பி.எஸ்.என்.எல். வளர்ச்சியில் ஓய்வூதியர்களின் பங்கு, ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விழாவில் விளக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் டி.ஆவுடைநாயகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட துணைப் பொருளாளர் பி.ரகுபதி, அமைப்புச் செயலர் மியாகன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai