சுடச்சுட

  

  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சமய நல்லிணக்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

  வாவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர்ரப்பானி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் எம். முஹம்மதுசாதிக் வாழ்த்திப் பேசினார். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கலலூரி பேராசிரியர் இரா. முகம்மதுரபீக், சமய நல்லிணக்கம் குறித்து பேசினார்.

  நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் வாவு எஸ். அப்துல்ரகுமான், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஏ.எஸ். முகம்மதுஅபுபக்கர், கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் முகம்மதுபாரூக், பொ. பீர்முகம்மது, முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் அ.ச. ராமையா, எழுத்தாளர் பிர்தௌஸ்ராஜகுமாரன், டி.எஸ்.எம்.ஓ. அசன் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழ் துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றார். தமிழ் பேராசிரியர் அ.மு. அயூப்கான் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai