சுடச்சுட

  

  புணே, ஹைதராபாத் நிறுவனங்கள் சுந்தரனார் பல்கலை.யுடன் ஒப்பந்தம்

  By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் புணே மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வரும் இரு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழிற்கல்வி இயக்ககம் வாயிலாக, கல்வி பயிலும்போதே ஊதியம் பெறும் வகையில் உதவித்தொகையுடன் கூடிய சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தி.தமிழ்ச்செல்வன், புணே நகரில் உள்ள ஓய்.ஐ.டி. மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஏ.எஸ்.எல்.ஜி. நிறுவன பொறுப்பாளர்களும், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆ.கு.குமரகுரு முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

  இந்நிகழ்ச்சியில் பாடத்திட்டப் பிரிவு இயக்குநர் பா.மாதவ சோமசுந்தரம், ஆட்சிக்குழு உறுப்பினர் சு.அழகேசன், தனிஅதிகாரி அ.பலவேசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  இந்த ஒப்பந்தத்தின் மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 300 பேர் பயனடைவார்கள். இந்த மாணவர்களுக்கு படிக்கும் 3 ஆண்டுகளும் உதவித்தொகை வழங்கப்படும். மோட்டார் வாகன பாகங்களின் உற்பத்தி, உற்பத்தி மேலாண்மை மற்றும் தர நிர்ணயம்  தொடர்பான செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை நிகழ் கல்வியாண்டிலேயே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை கவுன்சிலிங் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் தகவல்களை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) தி.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai