சுடச்சுட

    

    வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரிக்கை

    By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ச. முருகையா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் பி.செல்லப்பா வரவேற்றார்.

    மாநில துணைத் தலைவர் ப. பிரம்மநாயகம், மாநில பிரசாரச் செயலர் கரு. பூமிராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்க மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் மட்டுமல்லாது, மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வகையான மக்கள் நலத்திட்டங்களையும் கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையில் பணியாற்றும் வருவாய் கிராம ஊழியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் வரையறுக்கப்பட் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இளநிலை உதவியாளராக வருவாய்த் துறையில் பணியில் சேரும் ஊழியர்கள் வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர் வரையில் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெறும் நிலையுள்ளது.

    ஆனால்,  வருவாய் கிராம ஊழியர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை. எனவே, பணியில் உள்ள வருவாய் கிராம ஊழியர்களுக்கு அவரவர் கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai