சுடச்சுட

  

  "விழா நாள்களில் வணிக நிறுவனங்கள் இரவு முழுவதும் இயங்க அனுமதி தேவை'

  By திருநெல்வேலி,  |   Published on : 22nd December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி நகர வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழுக் கூட்டத்தில் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரவு நேரங்களில் வணிக நிறுவனங்கள் இயங்க காவல்துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

  திருநெல்வேலி நகரம் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் அதன் தலைவர் கே. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் என். மீரான் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் எஸ். பெத்துக்கனி, ஜி. ஸ்டீபன்பிரேம்குமார், துணைப் பொதுச்செயலர்கள் ச. வெங்கட்ராமன், டி. மாணிக்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், சண்முகசுந்தரம், செல்லசாமி, பகவதிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  தீர்மானங்கள்: டிச. 25-ம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிச. 24-ம் தேதி, புத்தாண்டு தினத்தையொட்டி டிச. 31-ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 13-ம் தேதிகளில் இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் இயங்கவும், ஜனவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் இரவு 2 மணி வரை வணிக நிறுவனங்கள் இயங்கவும் மாநகர காவல் ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.

  திருநெல்வேலி நகரம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. குடிநீர் வசதி இல்லை. கழிவறை சுத்தமாக இல்லை. ரயிலில் வரும் பயணிகள் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் முன்பாகவே இரவு நேரங்களில் நிலையத்தில் மின்விளக்குகள் அணைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தனிக்குடித்தனம் செல்வோர் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு பெயர் நீக்கம் சான்று கோரினால் வட்டாட்சியர் அலுவலகங்களில் மறுக்கப்படுவதால், புதிய குடும்ப அட்டை கிடைக்காத நிலை உள்ளது. புதிய குடும்ப அட்டை பெறுவோருக்கு பெயர் நீக்கம் சான்று வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பொதுச் செயலர் க. ராமகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாக்குழு உறுப்பினர் கே. ஜெயக்கொடி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai