சுடச்சுட

  

  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

  ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை, அரசு இதில் மாற்றம் ஏதும் செய்ய உரிமை இல்லை என 1982-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனை நினைவுகூரும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.குமாரசாமி வரவேற்றார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் சி.முத்துகுமாரசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரன், கூட்டமைப்பு பொருளாளர் ஏ.ஆதிமூலம், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பேசினர்.

  புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி சட்டத்தை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.

  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வைகுண்டமணி, பாலுசாமி, கோபாலன், அபுபக்கர், சலீம், பாலசுப்பிரமணியன், துரைடேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.கணேசன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai