சுடச்சுட

  

  ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

  முகாமை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தொடங்கிவைத்தார். தனி அதிகாரி சிவசங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மார்ஹி தியோடர், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தங்கவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கமலாநேரு தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆறுமுகம், முத்து, முருகானந்தம், வட்டார விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai