சுடச்சுட

    

    திருநெல்வேலியில் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.ஏ.வெங்கடேசலு தலைமை வகித்தார். மாநில மற்றும் நெல்லை மாவட்ட சிறுசேமிப்பு முகவர் சங்கச் செயலர் மு.பேச்சியப்பன், அஞ்சல் துறை பாளையங்கோட்டை கோட்ட கண்காணிப்பாளர் கே.லட்சுமணன் ஆகியோர் பேசினர்.  1.4.2013 முதல் சிறுசேமிப்பு முகவர்கள், மாநில அரசின் 2 சதவிகித ஊக்கத் தொகையைப் பெறுவதில் தடையாக உள்ள சியமிளா கோபிநாத் அறிக்கை தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    உதவி கண்காணிப்பாளர் டி.எஸ்.ரகுநாத், வணிக அதிகாரி எஸ்.கனகசபாபதி,  ஆர்.சீதாராமன், வி.துளசிராமன், எம்.சண்முகவேலு, ஆர்.சுப்பிரமணியன், வி.கிருஷ்ணன், கே.சண்முகவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai