சுடச்சுட

  

  திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

  உலக சிலம்பாட்டக் கலைச்சங்கம் சார்பில் ஜான்பாவா நினைவு மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி திருநெல்வேலி நகரம் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளி-கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். குழுப்போட்டியில் ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று பரிசு மற்றும் கோப்பையை பெற்றனர்.

  வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி முதல்வர் சின்னதம்பி, சிலம்ப பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் நீலகிருஷ்ணபாபு, உலக சிலம்பாட்டக் கலைச் சங்கத் தலைவர் எஸ்.எம்.சங்கர், பொதுச்செயலர் முகமதுசுபஹான், பயிற்சியாளர் ராஜசெல்வம் உள்பட பலர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai