சுடச்சுட

  

  மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தச்சநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  முகாமுக்கு, மாவட்ட மருத்து சேவை அணி துணைச் செயலர் இ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநகர துணைச் செயலர் எச்.அர்ஷத்சேக், கிளைத் தலைவர் எஸ்.இப்ராஹிம், கே.காதர், தச்சை உசேன், கிளைச் செயலர் கே.செய்யதுஅலி, வர்த்தக அணி ஜி.அரிகரன், பி.எஸ்.மாரியப்பன், கிளைப் பொருளாளர் கே.பீர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தென்மண்டல அமைப்பு துணைச் செயலர் எஸ்.எம்.ரசூல்மைதீன், உலகத் தமிழ் மருத்துவச் சங்க மருத்துவர் கு.சரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் பேட்டை மைதீன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai