சுடச்சுட

  

  தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்க மாநாடு

  By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்கத்தின் 11-ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாநாட்டை, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலர் ஆர்.விஜயகுமார் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு ஏஐடியூசி செயலர் டி.எம்.மூர்த்தி, அகில இந்திய வங்கி நிதி வசூலிப்போர் சம்மேளனத்தின் பி.பொன்னுசாமி சிறப்புரையாற்றினர். வி.ரகுராமன், ஜெ.ரவிச்சந்திரன், எம்.மணிவண்ணன், ஜெ.தாமஸ் ஜெயபிரபாகரன் ஆகியோரும் பேசினர்.

  வங்கிச் சேவையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. விவசாய கடன் வசதிகளை அதிகமாக வழங்க வேண்டும். வங்கி தினசரி சேமிப்புத் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும். வங்கி நிரந்தரப் பணிகளை அயல்பணிக்கு வழங்கக் கூடாது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வங்கி தொடங்க உரிமம் வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

  வரவேற்புக் குழு அமைப்பாளர் என்.எஸ்.பிச்சையா, தலைவர் ஆர்.ரங்கன், செயலர் ஜெ.ராஜபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுச்செயலர் பி.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai